Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சச்சினும், விராட் கோலியும் ஒரே மாதிரி அவுட்டாகி தோல்வியடைந்த வரலாறு [வீடியோ]

லெனின் அகத்தியநாடன்| Last Modified வியாழன், 26 மார்ச் 2015 (18:41 IST)
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான உலகக்கோப்பை போட்டிகளில் சச்சினும், விராட் கோலியும் ஒரே மாதிரி அவுட்டாகி அணியை தோல்வியடையச் செய்துள்ளனர்.
 
கடந்த 2003ஆம் ஆண்டு ஜோஹன்ஸ்பெர்க்கில் நடந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கங்குலி முதலில் பந்துவீச தீர்மானித்தார். பேட்டிங்கிற்கு சாதகமான இந்த மைதானத்தில் பந்துவீச முடிவு செய்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
 
சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி
அதன் படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். ஆடம் கில்கிறிஸ்ட் 57, ஹைடன் 37, ரிக்கி பாண்டிங் 140, மார்டின் 88 ரன்களும் எடுத்தனர். முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 359 ரன்கள் குவித்தது.
 
பின்னர் களமிறங்கிய இந்திய அணியினர் வரிசையாக நடையைக் கட்டினர். அதிகபட்சமாக வீரேந்திர ஷேவாக் மட்டும் 82 ரன்கள் குவித்தார். இந்த போட்டியில் 6 வீரர்கள் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. இறுதியில் 39.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 234 ரன்கள் எடுத்து கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது.
 
இந்த உலகக்கோப்பை போட்டியில் வெறும் 5 பந்துகளை சந்தித்த சச்சின் டெண்டுல்கர் 4 ரன்கள் எடுத்து வெளியேறினார். அந்த பந்தை கிளென் மெக்ராத் பவுன்சராக வீசினார். மார்புக்கும் மேலாக வந்த அந்த பந்தை ’புல் ஷாட்டாக’ சச்சின் அடித்தார். அதை பந்துவீசிய மெக்ராத் பிடிக்க நடையை கட்டினார் சச்சின்.
 
அதே போன்று ஆஸ்திரேலியாவுடன் இன்று நடைபெற்ற போட்டியில், விராட் கோலி 13 பந்துகளை சந்தித்து 1 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதில் மிட்செல் ஜான்சன் பவுன்சராக வீசினார். கிட்டதட்ட அதே உயரத்தில் வந்த அந்த பந்தை விராட் கோலியும் ‘புல் ஷாட்டாக’ ஆடித்து ஆட விக்கெட் கீப்பரிடம் பந்து தஞ்சம் புகுந்தது.
 
இதனால் சச்சின் டெண்டுல்கரும், விராட் கோலியும் முக்கியமான இரண்டு ஆட்டத்தில், அதுவும் அதே ஆஸ்திரேலியாவுடனே அவுட் ஆகி உலகக்கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பை தவறவிட்டுள்ளனர் என்பதுதான் சோகம்.

வீடியோ கீழே:
 


இதில் மேலும் படிக்கவும் :