வியாழன், 28 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 28 ஜூலை 2015 (16:08 IST)

இந்தியாவில் தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம்; 100ஆவது போட்டியை தொடும் டி வில்லியர்ஸ்

தென் ஆப்பிரிக்க அணி செப்டம்பர் முதல் நவம்பர் வரையில் 72 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது.
 

 
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி செப்டம்பர் மாதம் இறுதி வாரத்தில் இருந்து இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மூன்று 20 ஓவர் போட்டிகள், 5 ஒருநாள் மற்றும் 4 டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடவிருக்கிறது. மேலும், ஒரு பயிற்சிப் போட்டியிலும் விளையாடுகிறது.
 
இரு அணிகளும் மோதவுள்ள 2 டி-20 போட்டித் தொடரின் அட்டவணை:
 
முதலாவது போட்டி: அக்டோபர் 2 - தர்மசாலா
2ஆவது போட்டி: அக்டோபர் 5 - கட்டாக்
3ஆவது போட்டி: அக்டோபர் 8 கொல்கத்தா
 
5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரின் அட்டவணை:
 
முதலாவது போட்டி: அக்டோபர் 11 - கான்பூர்
2ஆவது போட்டி: அக்டோபர் 14 - இந்தூர்
3ஆவது போட்டி: அக்டோபர் 18 - ராஜ்கோட்
4ஆவது போட்டி: அக்டோபர் 22 - சென்னை
5ஆவது போட்டி: அக்டோபர் 25 - மும்பை
 
4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரின் அட்டவணை:
 
முதலாவது போட்டி: நவம்பர் 5 - 9 மொஹாலி
2ஆவது போட்டி: நவம்பர் 14 - 18 பெங்களூரு
3ஆவது போட்டி: நவம்பர் 25 - 29 - நாக்பூர்
4ஆவது போட்டி: டிசம்பர் 3 - 7 - டெல்லி
 
இந்தியாவில் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி முதல் முறையாக இந்தியாவில் 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடரில் தென் ஆப்பிரிக்காவின் ஒருநாள் அணியின் கேப்டனும் அதிரடி வீரருமான டி வில்லியர்ஸ் தனது 100ஆவது தொடரை விளையாட இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.