வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : ஞாயிறு, 25 ஜனவரி 2015 (06:12 IST)

6ஆவது விக்கெட்டுக்கு ரோஞ்சி, ஷட்டர் ஜோடி உலக சாதனை

நியூசிலாந்து அணி வீரர்களான ரோஞ்சி, ஷட்டர் ஜோடி 6ஆவது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் எடுத்தவர்கள் என்ற புதிய சாதனையை படைத்து.
 

சாதனை படைத்த ஷட்டரும், ரோஞ்சியும்..
 
நேற்று (23-01-2015) நியூசிலாந்து, இலங்கை அணிகளுக்கு இடையேயான 7 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் 5ஆவது ஆட்டம் நடைபெற்றது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 108 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது.
 
டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியை அழைத்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் எவரும் 30 ரன்களுக்கு மேல் தாண்டவில்லை. இதனால், 93 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
 
இதனைத் தொடர்ந்து 6ஆவது விக்கெட்டுக்கு விக்கெட் கீப்பர் லுக் ரோஞ்சி, கிரான்ட் எலியாட்டுடன் ஜோடி சேர்ந்தார். லூக் ரோஞ்ச் 74 பந்துகளில் தனது முதல் சதத்தை எட்டினார். கிரான்ட் எலியோட் 93 பந்துகளில் 2ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 360 ரன்கள் குவித்தது.
 
பின்னர் களமிறங்கிய இலங்கை அணி 43.4 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 252 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் தில்ஷன் 106 பந்துகளுக்கு 116 ரன்கள் எடுத்தார்.
 
மேலும் அடுத்தப் பக்கம்..

நேற்றைய சாதனைகள்:
 
நேற்று நியூசிலாந்து அணி எடுத்த 360 ரன்களே இலங்கைக்கு எதிராக நியூசிலாந்து அணியின் அதிகபட்ச ஸ்கோராகும்.
 
எலியாட் 96 பந்துகளில் 7 பவுண்டரி, 2 சிக்சருடன் 104 ரன்னும், லுக் ரோஞ்சி 99 பந்துகளில் 14 பவுண்டரி, 9 சிக்சருடன் 170 ரன்னும் விளாசி கடைசி வரை களத்தில் இருந்தனர். 6ஆவது விக்கெட்டுக்கு கிரான்ட் எலியோட், லூக் ரோஞ்சி ஜோடி 267 ரன்கள் குவித்து புதிய உலக சாதனை படைத்தது.
 
இதற்கு முன்பு 2007–ம் ஆண்டில் சென்னையில் நடந்த ஆப்பிரிக்க லெவன் அணிக்கும், ஆசிய லெவன் அணிக்கும் இடையிலான போட்டியில் மகேந்திர சிங் டோனி – மஹேலா ஜெயவர்த்தனே ஜோடி 218 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது.
 
அதேபோல் மொத்தமாகவும் இந்த ஜோடி சாதனைப் படைத்துள்ளது. இந்த ஜோடி எடுத்த 267 ரன்கள் உலக அளவில் பாட்னர்ஷிப்பில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. முதல் இடத்தில் நியூசிலாந்து தொடக்க ஜோடியான மார்ஷலும், மெக்கல்லமும் எடுத்த 274 ரன்களே முதலிடத்தில் உள்ளது.
 

லூக் ரோஞ்சி..
நேற்றைய போட்டியில் லூக் ரோஞ்சி எடுத்த 170 ரன்களே, ஒருநாள் போட்டி வரலாற்றில் 7ஆவது வரிசை வீரர் ஒருவர் குவித்த அதிகபட்சமாகும்.