தேர்வுக்குழு நெருக்கடியால் பதவி விலகினாரா தோனி?


லெனின் அகத்தியநாடன்| Last Updated: திங்கள், 9 ஜனவரி 2017 (20:54 IST)
தேர்வுக்குழு தரப்பில் இருந்து கொடுக்கப்பட்ட கடுமையான நெருக்கடியாலேயே இந்திய கிரிக்கெட் ஒருநாள் அணி கேப்டன் தோனி பதவி விலகியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி கடந்த 4ஆம் தேதி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாகவும், தொடர்ந்து ஒரு வீரராக விளையாடுவதாகவும் அறிவித்தார்.

தோனியின் திடீர் அறிவிப்பால் கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாமல், உலக கிரிக்கெட் விமர்சகர்கள்கூட பெரிதும் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில், தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் வலியுறுத்தியதின் பேரிலேயே மகேந்திர சிங் தோனி பதவி விலகியதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தோனியை சந்தித்துப் பேசியதாகவும் கூறப்படுகிறது. அப்போது அவர், வரும் 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டி குறித்த விவாதத்தின்போது, அதற்கு தகுதியான அணியை உருவாக்க வேண்டும் எனவும், அதுவரை தோனி உடல் தகுதி குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் தெரிகிறது. இதனாலேயே தோனி பதவி விலகியதாக தெரிகிறது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :