Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பாகிஸ்தான் வீரர்கள் ஓய்வறைக்கு சென்றாரா டிராவிட்?

Last Updated: புதன், 7 பிப்ரவரி 2018 (18:12 IST)
ஜூனியர் உலககோப்பை போட்டியை வென்று இந்திய அணி நான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இதற்கான முக்கிய காரணமாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கருதப்படுகிறார்.

இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மேனேஜரான முன்னாள் வீரர் நதீம் கான், வீரர்கள் அறைக்கு வந்த இந்திய அணியின் கோச் டிராவிட், பாகிஸ்தான் வீரர்களுக்கு ஆறுதல் கூறி பாராட்டினார் என ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.


இந்நிலையில் நதீம் கானின் கூற்றை வைத்து நிருபர் ஒருவர் பாகிஸ்தான் வீரர்கள் ஓய்வறைக்குத் திராவிட் சென்றார் என்பது போல் கேள்வி எழுப்பினார். இது குறித்து ராகுல் திராவிட் விளக்கமளித்துள்ளார்.


டிராவிட் கூறியதாவது, நான் பாக். வீரர்கள் ஓய்வறைக்கு செல்லவில்லை. அவர்களிடம் திறமை வாய்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் இருந்தார். நான் அவரை வாழ்த்தினேன், அதுவும் பாகிஸ்தான் வீரர்கள் ஓய்வறைக்கு வெளியே நின்றுதான் வாழ்த்தினேன் என கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :