வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Updated : சனி, 28 மார்ச் 2015 (12:03 IST)

தோனி குறித்து டுவிட் செய்த சாக்‌ஷி

தனது செல்ல மகளை காண முடியாமல் காத்திருந்த கேப்டன் தோனிக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் டுவிட் செய்துள்ளார், சாக்‌ஷி. 
 

 
கேப்டன் தோனி மற்றும் சாக்‌ஷி தம்பதிகளுக்கு கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்நிலையில் சாக்‌ஷி பிப் 6, 2015 அன்று பெண் குழந்தையை ஈன்றெடுத்தார். ஆனால் கேப்டன் தோனி சுற்றுப்பயணம்  காரணமாக அண்ணிய மண்ணில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால் தோனியால் தனது செல்ல மகளை நேரில் கண்டு ரசிக்க முடியாமல் உலகக் கோப்பையில் கவணம் செலுத்தினார்.
 
எனினும் உலகக் கோப்பையின் அரை இறுதி ஆட்டத்தில் தோல்வி கண்டதால் தற்போது வீரர்கள் அனைவரும் நாடு திரும்புயுள்ளனர். இந்நிலையில் தனது கணவரை ஆறுதல் அளித்து வரவேற்பது போல டுவிட் செய்துள்ளார் சாக்‌ஷி. அவற்றில் இந்திய அணிக்காக பெருமைப்படுகிறேன், வெற்றி தோல்வி இரண்டையும் சந்தித்தீர்கள், இறுதியாக என் கணவரை பார்க்கப் போறேன் என கூறப்பட்டுள்ளது.