வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 25 பிப்ரவரி 2015 (12:09 IST)

மோசமான ஆட்டம்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மீது நீதிமன்றத்தில் வழக்கு

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியின் மோசமான ஆட்டம் தொடர்பாக விசாரணை நடத்தக் கோரி பாகிஸ்தானில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
 
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தனது தொடக்க ஆட்டத்தில் இந்தியாவிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அடுத்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் 150 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
 
இதனால் பாகிஸ்தான் அணியினர் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளன்ர். பாகிஸ்தான் அணியினை அந்நாட்டு ரசிகர்கள், திட்டி தீர்த்து வருகின்றனர். அதேபோல் முன்னாள் வீரர்களும் அணி வீரர்களை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

 
இந்நிலையில், வழக்கறிஞர் ரிஸ்வான் குல் என்பவர் லாகூர் உயர் நீதிமன்றத்தில், வழக்கு தொடர்ந்துள்ளார். அதாவது, உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியினர் மோசமான ஆட்டம் தொடர்பாக விசாரணை நடத்தக் கோரி மனுதாக்கல் செய்துள்ளார்.
 
இம்மனுவை கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய உறுப்பினர்கள் பதிலளிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.