வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Bharathi
Last Modified: புதன், 30 செப்டம்பர் 2015 (10:11 IST)

ஜிம்பாப்வேவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி T 20  கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.


 
 
இரண்டு, 20 ஓவர் போட்டி, மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஜிம்பாவே அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரில் பாகிஸ்தான் முன்னிலை வகித்தது.
 
இந்நிலையில் கோப்பையை தீர்மானிக்கும் கடைசி மற்றும் இரண்டாவது கிரிக்கெட் போட்டி ஹராரேவில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்றி பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பாகிஸ்தான் அணி, 6 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்தது.
 
137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி களம் இறங்கியது. பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தது.  மசகட்சா 9, சிபாபா 3, ரன்களில் அடுத்தடுத்து வெளியேறினார்.
 
அதிகபட்சமாக  வில்லியம்ஸ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 40 ரன்கள் எடுத்தார்.   நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் பாகிஸ்தான் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றிருந்ததால் தொடரை 2-0 கைப்பற்றியுள்ளது.