1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Caston
Last Modified: செவ்வாய், 26 ஏப்ரல் 2016 (20:43 IST)

வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் டேரன் சமிக்கு பாகிஸ்தான் குடியுரிமை

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் கேப்டன் டேரன் சமிக்கு கவுரவ பாகிஸ்தான் குடியுரிமை வழங்க பாகீஸ்தான் அரசு முன்வந்துள்ளது.


 
 
பாகிஸ்தான் உள்ளூர் அணியான பெஷாவர் அணிக்காக தற்போது டி20 போட்டிகளில் விளையாடி வருகிறார் டேரன் சமி. பாகிஸ்தானால் தோற்கடிக்க முடியாத இந்தியாவை டி20 உலகக் கோப்பை போட்டியில் டேரன் சமி தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி தோற்கடித்தது. இதனால் தற்போது பெஷாவர் அணியில் விளையாடி வரும் டேரன் சமி அங்கு ரசிகர்களால் பிரபலமாக கொண்டாடப்படுகிறார்.
 
இந்நிலையில் டேரன் சமிக்கு பாகிஸ்தானின் கவுரவ குடியுரிமை வழங்க வேண்டும் என பெஷாவர் அணியின் உரிமையாளர் ஜாவேத் அப்ரிடி கோரிக்கை விடுத்திருந்தார்.
 
இதனையடுத்து பாகிஸ்தானின் கைபர் பதுன்க்வா மாகாணத்தின் முதலமைச்சர் பெர்வெய்ஸ் கட்டாக் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் டேரன் சமிக்கு கவுரவ பாகிஸ்தான் குடியுரிமை வழங்குவதில் பெருமை கொள்வதாகக் கூறியுள்ளார். ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னமும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.