வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 25 மே 2018 (13:18 IST)

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி: முதல் இன்னிங்ஸில் 184-க்கு சுருண்டது இங்கிலாந்து!

பாகிஸ்தான் அணிக்கு எதிரான லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 184 ரன்களுக்கு அனைத்து வீக்கெட்டுகளையும் இழந்தது.
 
இங்கிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி நேற்று லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.
 
பாகிஸ்தான் அணியின் அப்பாஸ் மற்றும் அமீர்ரின் சிறப்பான பந்துவீச்சாள் இங்கிலாந்து அணி 58 ஓவர்களில் 184 ரன்களை எடுத்து அனைத்து வீக்கெட்டுகளையும் இழந்தது. அதிகப்பட்சமாக குக் 70 ரன்களும், ஸ்டோக்ஸ் 38 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் அணி சார்பில் அப்பாஸ் மற்றும் அமீர் 4 வீக்கெட்டுகளை கைப்பற்றினர்.
 
இதன் பின்னர் முதல் இன்னிங்ஸை விளையாட களமிறங்கிய பாகிஸ்தான் அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 23 ஓவர்களில் 1 வீக்கெட் இழப்பிற்கு 50 ரன்களை எடுத்தது. அசார் அலி 18 ரன்களுடனும், ஹரிஸ் சோஹைல் 21 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.