வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 7 அக்டோபர் 2015 (19:25 IST)

’ஒரு தடவை ஜெயித்துவிட்டால், அப்புறம் நாங்கள் வேற மாதிரி’ : ஹர்பஜன் சிங்

நாங்கள் ஒரு தடவை வெற்றி பெற்றுவிட்டால், பிறகு எங்களை தோறகடிப்பது கடினம் என்று மூத்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
 

 
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலானா 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை தென் ஆப்பிரிக்கா அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது.
 
முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி தோல்வியை தழுவியது. 3ஆவது போட்டி நாளை கொல்கத்தாவில் நாளை நடைபெறவுள்ளது.
 
இந்நிலையில் இது குறித்து கூறியுள்ள ஹர்பஜன் சிங், “நாங்கள் தொடரை இழந்துள்ளோம். ஆனாலும், இறுதிப்போட்டியில் விளையாட நிறைய இருக்கிறது. நிச்சமயமாக நாங்கள் வெல்வோம். பிறகு எங்களது கதையே வேறுமாதிரியாக இருக்கும்.
 
ஒருநாள் தொடரும், டெஸ்ட் தொடரும் இனிமேல்தான் தொடங்கவுள்ளது. நாங்கள் எங்களுடைய சிறந்த ஆட்டத்தை காண்பித்து மேலேவர விரும்புகிறோம். நாங்கள் ஒரு தடவை வெற்றிபெற்றுவிட்டால், பிறகு எங்களை தோறகடிப்பது கடினம்” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “டி 20 போட்டிகளில் பேட்ஸ்மேன்களின் ரன்குவிப்பை கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக விக்கெட்டுகளை கைப்பற்றுவது குறித்து சிந்திப்பது முக்கியம். இந்திய அணி டி 20 உலகக்கோப்பையை கைப்பற்றினால், அதில் சுழற்பந்து வீச்சாளர்களின் முக்கிய பங்கு வகிக்கும் என்று நினைக்கிறேன்.

இந்திய அணியில் நான்கு சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். நான்கு பேரும் சிறந்த முறையில் செயல்பட்டால் உலகக்கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பை பெறும்” என்று கூறியுள்ளார்.