என் குழந்தயை பாக்குறதை விட இது முக்கியமா இருந்தது! – சோதனைகளை சாதனையாக்கிய நடராஜன்!

சிட்னியை சுற்றிப்பார்க்கும் நடராஜன்: வைரலாகும் புகைப்படம்!
Prasanth Karthick| Last Modified ஞாயிறு, 24 ஜனவரி 2021 (14:34 IST)
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்று நாடு திரும்பிய இந்திய அணியின் தமிழக வீரர் நடராஜன் தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் இந்தியா அணி வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற்றது பெரும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த வீரர் நடராஜனின் பங்களிப்பு தமிழகத்திற்கு பெருமையாக கருதப்படுகிறது. இந்நிலையில் வெற்றிபெற்று நாடு திரும்பிய நடராஜனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அனுபவம் குறித்து பேசியுள்ள நடராஜன் ”என்னுடைய முதல் போட்டியில் விக்கெட் எடுத்தது கனவு போல உள்ளது. வெற்றி கோப்பையை ஏந்தியது மகிழ்ச்சியாக உள்ளது. பிறந்த என் குழந்தையை பார்ப்பதை விட நாட்டுக்காக விளையாடியதை பெருமையாக உணர்கிறேன்” என கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :