வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. »
  3. கிரிக்கெட்
  4. »
  5. செய்திகள்
Written By Muthukumar
Last Updated : சனி, 19 ஏப்ரல் 2014 (19:54 IST)

ஐபிஎல். கிரிக்கெட்: பெங்களூரு 2வது வெற்றி! மும்பை 2வது தோல்வி!

துபாயில் இன்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அபாரமான 2வது வெற்றியைப்பெற, மும்பை இந்தியன்ஸ் அணி 2வது தோல்வியை சந்தித்தது.
இதன் மூலம் ராயல் சாலஞ்சர்ஸ் அட்டவணையில் முதலிடம் பிடித்தது. முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் பெங்களூருவின் துல்லியமான அபார பந்து வீச்சிற்கு தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து 115 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது. தொடர்ந்து ஆடிய ராயல் சாலஞ்சர்ஸ் பார்த்தீவ் படேல், மற்றும் ஏ.பி. டிவில்யர்ஸின் ஸ்டெடியான பேட்டிங்கினால் 17.3 ஓவர்களில் 116/3 என்று வெற்றி பெற்றது.
 
பெங்களூரு இலக்கை துரத்திய போது மேட்சன் விக்கெட்டை 3வது ஓவரில் மலிங்கா வீழ்த்தினார். துல்லியமான யார்க்கர் ஒன்றுமே செய்யமுடியவில்லை. ஐபிஎல். கிரிக்கெட்டில் மலிங்காவின் 50வது பவுல்டு இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜாகீர் கான் அபாரமாக வீசினார். அவர் வீசிய ஆட்டத்தின் 4வது ஓவரில் ஜாகீர் கான் வீசிய ஷாட் பிட்ச் பந்தை ஸ்லிப்பில் கேட்சின் பிராக்டீஸ் கொடுத்து கோலி ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார்.
அடுத்த பந்தே யுவ்ராஜ் மீண்டும் ஷாட் பிட்ச் ஆஃப் ஸ்டம்ப் வெளியே பந்தை தொட்டார் விக்கெட் கீப்பர் டாரே கேட்சை தவற விட்டார். ஆனால் அடுத்த பந்து ஜாகீர் கானின் பியூட்டி என்றே சொல்லவேண்டும், முதல் பந்தே அவுட் ஆகியிருக்க வேண்டியதால் பதட்டத்தில் இருந்த யுவராஜிற்கு அருமையான இன் கட்டரை 139 கிமீ வேகத்தில் வீச நேராக கால்காப்பில் வாங்கி எல்.பி. ஆனார். ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகள்.
 
4வது ஓவரில்  பெஙளூஉரு 17/3 என்று இது ஒரு நல்ல போட்டியாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பார்த்திவ் படேல் 50 நாட் அவுட். டிவிலியர்ஸ் 45 நாட் அவுட் எளிதில் வென்றனர். ஜாகீர் கான் 4 ஓவர்கள் வீசி 21 ரன்கள் 2 விக்கெட். ஹர்பஜன் 4 ஓவர்கள் 14 ரன்கள். டைட்டாக வீசினார்.

முன்னதாக டாஸ் வென்ற பெங்களூரு இலக்கைத் துரத்த முடிவெடுத்தது. மும்பை களமிறங்கியது.
மைக் ஹஸ்ஸி மீண்டும் சொதப்பினார். இந்த முறை ஸ்டார்க் வீசிய முதல் ஓவரின் 3வது பந்திலேயே பாயிண்டில் நேராக கேட்ச் கொடுத்தார் ஆனால் சாஹல் என்ற இளம் வீரர் சிட்டரை டிராப் செய்தார்.
 
2வது ஓவர் ஆல்பி மோர்கெல் வீச மற்றொரு துவக்க வீரர் டாரே எட்ஜ் செய்ய ஸ்லிப்பில் மேடின்சன் மடத்தனமாக கேட்சை கோட்டைவிட்டார். மைக் ஹஸ்ஸி அதன் பிறகு வேஸ்ட் செய்தார். 15 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து அவர் ஆல்பி மோர்கெல் பந்தை புல் ஆடி வீழ்ந்தார்.
 
பிறகு ஆல்பி மோர்கெஇல் ஒரே ஓவரில் 3 பவுண்டரிகள் வந்தது ராயுடு முதல் பவுண்டரியை அடிக்க தாரே 2 பவுண்டரிகளை விளாசினார். அந்த ஓவரில் 18 ரன்கள் அடிக்க பவர் பிளேயில், 6வது ஓவர் முடிவில் மும்பை 49/1 என்று நன்றாகவே இருந்தது. தாரே தட்டுத் தடுமாஇயபோது வருண் ஆரோன் ஒரு பவுன்சரை வீச இவர் கதை முடிந்தது.
 
10வது ஓவரில் சாஹல் ஒரு கூக்லி வீச ரோகித் சர்மா 2 ரன்களில் லாங் ஆஃபில் எளிதான கேட்சில் வெளியேறினார். 10வது ஓவர் முடிவில் 63/3 அதாவது பவர் பிளேயிற்கு பிறகு 4 ஓவர்களில் வெறும் 14 ரன்கள் 2 விக்கெட்டுகள்.
 
சாஹல் மீண்டும் போலார்டை வீழ்த்தினார். லாங் ஆனில் கேட்ச். சாஹல் மும்பை இந்தியன் வீரர் அங்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இன்று  வாய்ப்பு கிடைத்ததும் தன் முந்தைய அணியை என்ன சேதி என்று கேட்கிறார்.
 
அதன் பிறகு அதிரடி மன்னன் கோரி ஆண்டர்சன் வருண் ஆரோனை 2 முக்கியமான பவுண்டரிகளை அடித்தார். ராயுடுவை 35 ரன்னில் ஸ்டார்க் வீழ்த்தினார். அடுத்த பந்தே ஸ்டார்க்கை தூக்கி அடிக்க ஆண்டர்சன் கோலியின் அபார கேட்சிற்கு அவுட் ஆனார். ஸ்டார்க் ஹேட்ரிக்கில் இருந்தார்.ஹர்பஜன் வந்தார் எட்ஜ் செய்தா ஆனால் அது பார்திவுக்கு கேரி ஆகவில்லை. 
 
பிறகு 115 ரன்களில் தேங்கியது மும்பை. ஆட்டநாயகனாக பார்த்தீவ் படேல் தேர்வு செய்யப்பட்டார்.