வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : செவ்வாய், 7 ஜூலை 2015 (18:12 IST)

”தோனியின் 34வது பிறந்தநாள்”: தோனியைப் பற்றி உலக கிரிக்கெட் பிரபலங்களின் கருத்துகள் ஒரு தொகுப்பு

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மட்டுமல்ல; உலக கிரிக்கெட் வரலாற்றில் கூட தவிர்க்க முடியாத ஒரு பெயர் மகேந்திர சிங் தோனி.
 

 
இந்தியாவுக்கு ஐசிசி உலகக்கோப்பை, மினி உலகக்கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் கோப்பை, டி20 உலகக்கோப்பை என மூன்று உலகக்கோப்பைகளை பெற்று தந்த தன்னிகரில்லா கிரிக்கெட் வீரர் - இந்திய அணியின் கேப்டன் தோனி.
 
இன்று அவருடைய 34வது பிறந்தநாள். இந்த நாளில் கேப்டன் தோனியைப் பற்றி உலக கிரிக்கெட் பிரபலங்களின் கருத்துக்களை பார்க்கலாம்.
 
சச்சின் டெண்டுல்கர்:
நான் உடன் விளையாடிய கேப்டன்களிலேயே சிறந்த கேப்டன் தோனி தான்.
 

 
சுனில் கவாஸ்கர்:
நான் இறக்கும் தருவாயில், இறுதியாக நான் பார்க்க விரும்புவது 2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தோனி இறுதியாக அடித்த சிக்ஸர்.
 
சவுரவ் கங்குலி:
தோனி நாட்டின் மிகச் சிறந்த கேப்டன். அவருடைய ரெக்காடுகளே அதற்கு ஆதாரம்.
 
ராகுல் டிராவிட்:
தோனி ஒரு தலைவனுக்கான உதாரணம். நெருக்கடியான தருணங்களின் அவருடைய அமைதியான அணுகுமுறையை நான் எப்போதுமே பார்த்து வியக்கிறேன்.
 

 
கேர்ரி கிரிஸ்டன்:
நான் தோனியுடன் இணைந்து எனது பக்கமே போர் தொடுக்க போகிறேன்.
 
மேக்கேல் வாகன்:
உலக கிரிக்கெட்டில் பதற்றமில்லா மனிதன். அதனால்தான் அவரால் பல விஷயங்களை சாதிக்க முடிகிறது.
 
அலஸ்டைர் குக்:
வெறும் சாதாரண சுழற்பந்தால் மட்டும் தோனியை வீழ்த்தி விட முடியாது. அவர் உலகிலேயே சிறந்த வீரர்.
 

 
இயன் பிஷப்:
இறுதி ஓவரில் 15 ரன்கள் எடுத்தால் தான் வெற்றி என்று சொன்னால், பதற்றம் பந்துவீச்சாளருக்கு தான். தோனிக்கு அல்ல.
 
மைக் ஹஸி:
நான் தோனி தலைமையின் கீழ் விளையாடும் வாய்ப்பைப் பெற்றதால் நான் கொடுத்து வைத்தவன்.
 

 
மேலும் அடுத்த பக்கம்..

ரவீந்திர ஜடேஜா:
பேட்டிங் கற்றுக் கொள்ள வேண்டுமென்றால், தோனியுடன் பேட் செய்ய வேண்டும்.
 

 
கிரிக்கெட் விமர்சகர் ஹர்ஷா போக்லே:
தோனி இறுதிவரை விளையாடுகிறார் என்று சொன்னால் ஒன்று மட்டும் உறுதி - அது அணியின் வெற்றி!
 
வேய்ன் பிராவோ:
நான் கேப்டன் பொறுப்புக்கான தகுதிகளை தோனியிடமிருந்து பெற்று வருகிறேன்.
 

 
மஹீலா ஜெயவர்த்தனே:
தோனியைப் போன்ற ஒருவரிடன் ஒரு இன்ச் அப்படி, இப்படி தடுமாறினோம் என்று சொன்னால் ஆட்டத்தையே மாற்றிவிடுவார். தோனி சிறப்பாக ஆட்டத்தை நிறைவு செய்யக்கூடிய வீரர். அவர் ஒரு பதற்றமற்ற, அமைதியான, தன் வலிமை அறிந்த வீரர். மிகவும் உறுதியான மனிதர்.
 
கபில் தேவ்:
தோனி என் ஹீரோ. நாம் சச்சின், சேவாக் பற்றியெல்லாம் நிறைய பேசியிருக்கிறோம். ஆனால், இந்த பையனிடம் யாரிடமும் இல்லாத திறமை உள்ளது.
 

 
டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா:
ராஞ்சியிலிருந்து எப்படி தோனி என்ற சக்தி வாய்ந்த வீரர் கிரிக்கெட் விளையாட்டுக்காக உருவானாரோ, அதுபோல டென்னிஸ் விளையாட்டுக்காக ஒரு அசாத்தியமான வீரர் ராஞ்சியிலிருந்து உருவாக வேண்டும் என்று நான் வேண்டிக்கொள்கிறேன்.