வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Caston
Last Modified: திங்கள், 16 நவம்பர் 2015 (19:10 IST)

பயிற்சியாளருக்கு சவால் விடுத்த ஸ்டார்க்

ஆஸ்திரேலியா வேகப்பந்து விச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தைரியமிருந்தால் என் பந்தை சந்தியுங்கள் என நியூசிலாந்து பேட்டிங் பயிற்சியாளர் மெக்மில்லனுக்கு சவால் விடுத்துள்ளார்.
 
ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெர்த்தில் நடைபெற்று வருகிறது. நேற்றைய மூன்றாவது நாள் ஆட்டத்தில் மிட்செல் ஸ்டார்க் நியூசிலாந்து வீரருக்கு 160.4 கிலோ மீட்டர் வேகத்தில் ஒரு யார்க்கர் பந்து வீசினார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வேகமாக வீசிய பந்து இதுதான் என்று கூறப்படுகிறது.
 
இது குறித்து நியூசிலாந்து அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மெக்மில்லன் கூறுகையில், ‘குயிக் டெலிவரி பந்து வேகமாக செல்வதாக தோன்றும். சில சுழற்பந்து வீச்சாளர் கூட குயிக் டெலிவரி வீசுவார்கள். அதனால் வேகத்தை அளக்கும் தொழில்நுட்பத்தில் கோளாறு இருக்கலாம்” என்றார்.
 
இதற்கு பதில் அளித்த ஸ்டார்க் ‘‘மெக்மில்லன் விரும்பினால் நாளை வலைப்பயிற்சியின் போது என்னுடைய பந்தை சந்திக்க வேண்டும்’’ என்று சவால் விடுத்துள்ளார்.