வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 17 நவம்பர் 2015 (16:20 IST)

மிட்செல் ஜான்சன் எப்போதுமே சிறப்பான பந்துவீச்சாளர் - சச்சின் புகழாரம்

ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஜான்சன் எப்போதுமே சிறப்பான பந்துவீச்சாளர் என்று இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.
 

 
ஆஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஜான்சன் பெர்த்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டியுடன், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெறப்போவதாக அறிவித்துள்ளார்.
 
இந்நிலையில், சச்சின் டெண்டுல்கர் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், “மிட்செல் ஜான்சனுக்கு வாழ்த்துக்கள். அவர் எப்போதுமே சிறப்பான பந்துவீச்சாளராக திகழ்ந்தவர்.
 

 
மும்பை இண்டியன்ஸ் அணிக்காக விளையாடியபோது அவரை நான் நன்றாக அறிவேன். அவருடைய ஆக்ரோஷமான அனுகுமுறையை நான் அனுபவித்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
 
73 டெஸ்டில் விளையாடிய மிச்சேல் ஜான்சன் 311 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். 153 ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய அவர் 239 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.
 
டெஸ்டில் 61 ரன்கள் கொடுத்து 8 விக்கெட்களை கைப்பற்றி தனது சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த ஜான்சன், 12 முறை 5 விக்கெட்களுக்கு அதிகமாகவும், 3 முறை 10 விக்கெட்களுக்கு அதிகமாகவும் கைப்பற்றி உள்ளார்.
 
ஒரு நாள் போட்டிகளில் 31 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்களை கைப்பற்றி தனது சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த ஜான்சன், 30 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி 38 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.