வயதில் அரை சதத்தை தொடும் வரை பாகிஸ்தானுக்காக ஆடத் தயார்: மிஸ்பா உல் ஹக்


Sugapriya Prakash| Last Modified சனி, 20 ஆகஸ்ட் 2016 (11:45 IST)
இங்கிலாந்துக்கு எதிராக இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை சமன் செய்த பாகிஸ்தான் அணிக்கு இந்தத் தொடர் பல திறப்புகளை வழங்கியுள்ளது. இதனையடுத்து கேப்டன் மிஸ்பா உல் ஹக் 50 வயது வரை ஆடத்தயார் என்று கூறியுள்ளார்.

 
 
பத்தரிக்கை நேர்காணலில் மிஸ்பாவின் எதிர்காலத் திட்டம் என்னவென்று கேட்ட போது சற்றே நகைச்சுவையுடன் மிஸ்பா “வாய்ப்பு கிடைத்தால் இன்னும் சில காலம் ஆடுவேன். 50 வயது வரை ஆடினால் பாகிஸ்தானுக்கு ஒரு உலக சாதனை கிடைகும்” என்றார்.
 
தற்போது அதிக வயதில் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற வீரராக இங்கிலாந்தின் வில்பிரெட் ரோட்ஸ் திகழ்கிறார். இவர் ஓய்வு பெறும்போது அவரது வயது 52 என்பது குறிப்பிடத்தக்கது. 
 
தற்போது ஆடும் வீரர்களில் மிஸ்பா உல் ஹக்கிற்கு 42 வயது, யூனிஸ் கானுக்கு 38 வயது, ரங்கனா ஹெராத்துக்கும் 38 வயது, சுல்பிகர் பாபருக்கு 37 வயது, ஆடம் வோஜஸுக்கு 36 வயது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :