1. விளையாட்டு
  2. »
  3. கிரிக்கெட்
  4. »
  5. செய்திகள்
Written By Muthukumar
Last Updated : வெள்ளி, 18 ஏப்ரல் 2014 (18:24 IST)

மெக்கல்லம், டிவைன் ஸ்மித் அதிரடியில் 205 ரன்கள் குவித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

அபுதாபியில் நடைபெற்று வரும் இன்றைய ஐபிஎல். கிரிக்கெட் போட்டியில் பெய்லி தலைமை பஞ்சாப் அணியை தோனி தலைமை சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடியது, இதில் முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்துள்ளது.
சென்னை அணிக்காக அதிரடி மன்னர்களான டிவைன் ஸ்மித், பிரெண்டன் மெக்கல்லம் துவக்கத்தில் களமிறக்கப்பட்டனர். முதல் 2 ஓவர்களில் 10 ரன்கள்தான் வந்தது. 
 
மிட்செல் ஜான்சன் வீச வந்தார் டிவைன் ஸ்மித் ஒரு பவுண்டரி அடித்தார். அதே ஓவரில் மெக்கல்லம் ஒரு அப்பட் கட் சிக்ஸ் அடிக்க துவங்கியது அதிரடி. 5வது ஓவரில் அவானாவை ஸ்மித் 2 பவுண்டரிகள் விளாசினார். 4.3 ஓவர்களில் சென்னை 50 ரன்களை எட்டியது. இதே ஓவரில் கேப்டன் பெய்லி மிகப்பெரிய தவறு செய்தார் மெக்கல்லமிற்கு மிட் ஆனில் கேட்சை கோட்டைவிட்டார். பவர்பிளேயின் கடைசி ஓவரை ஜான்சன் வீச வந்தார் அவரது 5வது பந்து லெந்த் பால் அதனை மெக்கல்லம் மாட்டடி அடிக்க மிட்விக்கெட்டில் பந்து மைதானத்திற்கு வெளியே சென்றது.

6 ஓவர்களில் 70 ரன்கள் சென்னையின் பவர்பிளே அதிகபட்ச ஸ்கோர் ஆகும் இது. 8வது ஓவரில் மெக்கல்லம் அரைசதம் கண்டார். விக்கெட்டே விழவில்லை. 10வது ஓவர் முடிவில் ஸ்கோர் 102/0. ஸ்மித் 32 நாட் அவுட், மெக்கல்லம் 58 நாட் அவுட். 13வது ஓவரில் மெக்கல்லம் படேலை ஒரு சிக்சர் விளாசி பிறகு அதே ஓவரில் புல் ஆடி டீப் மிட்விக்கெட்டில் மேக்ஸ்வெலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 45பந்துகள் 5 சிக்ஸ் 4 பவுண்டரிகளுடன் மெக்கல்லம் 67 ரன்கள் எடுத்தார். ரெய்னா களமிறங்கி பவுண்டரி அடித்தார், பிறகு அவருக்கும் ஒரு கேட்சை கோட்டைவிட்டார் விக்கெட் கீப்பர்.
மேக்ஸ்வெல் பந்து வீச அழைக்கப்பட 15வது ஓவரின் 5வது பந்து ரிவர்ஸ் ஸ்வீப் பவுண்டரி. அடுத்த பந்து லாங் ஆனில் சிக்ஸ். ஸ்மித் 38 பந்துகளில் 6 பவுண்டரி 2 சிக்சருடன் 58. பிறகு ஜான்சன் வந்தார் அவரை லாங் ஆனில் ஒரு பயங்கர சிக்ஸ் அடித்தார் ஸ்மித், அதே ஓவரில் ரெய்னா ஒரு பவுண்டரி. அடுத்த பாலாஜி ஓவரில் ஸ்மித் 66 ரன்களில் வெளியேறினார்.
 
தோனி களமிறங்கி அதே பாலாஜி ஓவரில் இரண்டு வைடு பந்துகளை அழகாக ஸ்லிப் திசையில் பவுண்டரி விளாசினார். ரெய்னா 24 ரன்களில் வெளியேற தோனி பாலாஜியை கடைசி ஓவரில் நன்றாக கவனித்தார். 20வது ஓவர் முதல் பந்து லாங் ஆனில் பளார்.. சிக்ஸ், பிறகு சிங்கிள், பிராவோ வந்தார் ஒரு கடினமான புல்டாசை பாயிண்டில் சிக்ஸ் அடித்தார். பிறகு தோனி ஒரு பவுண்டரி. கடைசி பந்து அவுட். தோனி 11 பந்தில் 26 ரன்கள். கடைசி ஓவரில் 18 ரன்கள் சென்னை 205/4.
 
டெல்லி அணி இலக்கைத் துரத்தி வருகிறது. சேவாக் 19 ரன்களை விரைவில் எடுத்து நெஹ்ராவின் அருமையான பந்தில் பவுல்டு ஆனார். 3 ஓவர்கள் முடிவில் 31 ரன்கள். சென்னை 3 ஓவர்கள் முடிவில் 33. பெய்லி, மேக்ஸ்வெல் போன்ற அதிரடிக்கூட்டத்தை வைத்துக்கொண்டு நாம் எதையும் சொல்லி விட முடியாது.