வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 18 அக்டோபர் 2016 (22:19 IST)

’சூதாட்டத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் வீரர்களை எச்சரித்தேன்’ - மனம் திறக்கும் சோயப் அக்தர்

சூதாட்டத்தில் ஈடுபட்ட வீரர்களை நான் எச்சரித்தேன் என்று பாகிஸ்தான் வீரர் சோயப் அக்தர் கூறியுள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


 

ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என எல்லோரலும் அழைக்கப்படுபவர் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர். இவர், வேகத்திற்கு மட்டுமல்லாமல் தனது அதிரடி கருத்துக்களாலும் அடிக்கடி செய்திகளில் இடம்பெறுபவர்.
 
இந்நிலையில், சோயப் அக்தர் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், ”1996ஆம் ஆண்டில் கிரிக்கெட்டில் சூதாட்டம் வெகு அளவில் வியாபித்து இருந்தது. ஆனால், அத்தகைய முறைகேடுகளில் ஈடுபடுவதை தவிர்த்துவிட்டேன்.
 
பாகிஸ்தான் வீரர்களின் ஓய்வு அறையின் சூழல் மிகவும் விசித்திரமாக இருந்தது. நம்புங்கள், வீரர்களின் ஓய்வு அறை மோசமான சாத்தியங்களை கொண்டிருந்தது. சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களின் வட்டத்தில் இருந்து முற்றாக நான் விலகி இருந்தேன்.
 
மேலும், என்னுடைய சக வீரர்களை ஒருமைப்பாட்டுடனும், நேர்மையுடனும் விளையாடும்படி எச்சரிக்கை செய்தேன். அத்துடன் சூதாட்டத்தில் குற்றம் சுமத்தப்பட்ட முகமது ஆமிரையும் நான் எச்சரித்தேன்” என்று தெரிவித்துள்ளார்.