வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 8 அக்டோபர் 2015 (22:05 IST)

மழையால் கைவிடப்பட்டது இறுதிப் போட்டி; தொடரை கைப்பற்றியது தென் ஆப்பிரிக்கா

இந்­தியா – தென்­னா­பி­ரிக்க அணிகள் மோதும் 3ஆவது மற்றும் கடைசி டி-20 போட்டி மழையால் கைவிடப்பட்டது.
 

 
இந்­தியா – தென்­னா­ப்பி­ரிக்க அணிகள் மோதும் 3ஆவது மற்றும் கடைசி டி-20 கிரிக்கெட் போட்டி கொல்­கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடக்­க இருந்தது.
 
3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரின் முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி தோல்வியை தழுவியது.
 
இதனால், 3ஆவது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இந்திய அணி ஆறுதல் வெற்றிபெறும் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தனர்.
 
ஆனால், தொடர்ச்சியாக பெய்த மழையால் ஆடுகளம் ஈரப்பதத்துடன் காணப்பட்டது. இதனால் ஒரு பந்துகூட வீசப்படாமல் ஆட்டம் கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.
 
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா அணி கோப்பையை தட்டிச் சென்றது. தொடர் நாயகன் விருது தென் ஆப்பிரிக்க வீரர் ஜேபி டுமினிக்கு வழங்கப்பட்டது.