1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Modified: புதன், 1 ஜூலை 2015 (14:20 IST)

உலகின் அதிக சம்பளம் பெறும் பிரபலங்கள் பட்டியலில் தோனி இடம்பிடிப்பு

உலகில் அதிகளவு சம்பளம் பெறும் பிரபலங்களின் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் தோனி இடம்பிடித்துள்ளார்.
நடப்பு ஆண்டிற்கான அதிகளவு சம்பளம் பெறும் பிரபலங்களின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இதில் பிரபல பாலிவுட் நட்சத்திரங்களான அமிதாப் பச்சான், அபிஷேக் பச்சன், சல்மான் கான் ஆகியோர் 71 ஆவது இடத்தையும், அக்‌ஷய் குமார் 76 ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர். இதில் இந்திய அணியின் கேப்டனான தோனி 82 ஆவது இடத்தில் உள்ளார்.
 
இதில் அமெரிக்க குத்துச்சண்டை வீரரான பிளாய்ட் மேவெதர் முதலிடத்தை பிடித்துள்ளார். 2 ஆவது இடத்தை குத்துச்சண்ட வீரர் மென்னி பாக்கியாவோயும், 3 ஆவது இடத்தை பிரபல பாடகர் கேத்தி பெர்ரியும்  இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.