வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 31 அக்டோபர் 2016 (14:22 IST)

கோலியுடன் எனது காதல் முறிந்துவிட்டது: அனுஷ்கா சர்மா

இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல வீரரான விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா ஆகிய இருவரும் காதலித்து வந்தனர். தற்போது கோலியுடன் எனது காதல் முறிந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.


 

 
இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல வீரரான விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா ஆகிய இருவரும் காதலித்து வந்தனர். அண்மையில் இருவரும் இடையே ஏதோ பிரச்சனை ஏற்பட்டு பிரிந்து விட்டதாக தகவல் வந்தது.
 
ஆனால் அதன் பிறகு மீண்டும் இருவரும் சேர்ந்து ஒன்றாக சுற்றி சந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன் வெஸ்ட் இண்டீஸ் உடன் நடைப்பெற்ற போட்டி தொடரில் அனுஷ்கா சர்மா வெஸ்ட் இண்டீஸ் சென்றது குறிப்பிடத்தக்கது.
 
அதன் பிறகு இவர்களின் காதல் பற்றி எந்த செய்தியும் வெளிவரவில்லை. அனுஷ்கா சர்மா அளித்த பேட்டி ஒன்றில், கோலியும் நானும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டோம்.  
 
எனக்கு யார் மீதும் எளிதில் ஈர்ப்பு வராது. அப்படியே வந்தாலும் அது நீண்ட நாள் நீடிப்பதில்லை என்பது எனக்கு இப்போது புரிந்து விட்டது என்று கூறியுள்ளார்.