1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 8 ஆகஸ்ட் 2016 (10:21 IST)

லோதா கமிட்டியின் பரிந்துரைகள் சட்டவிரோதமானது - மார்க்கண்டேய கட்ஜூ

லோதா கமிட்டியின் பரிந்துரைகள் சட்டவிரோதமானது என்று முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கூறியுள்ளார்.
 

 
லோதா கமிட்டியின் பரிந்துரைகள் குறித்து கூறிய அவர், ’லோதா கமிட்டியின் பரிந்துரைகள் சட்டவிரோதமானது. பிசிசிஐ செயல்பாடுகளில் உள்ள குறைபாடுகளைக் கண்டுபிடிக்கவே உச்ச நீதிமன்றம் லோதா கமிட்டியை நியமித்தது.
 
லோதா கமிட்டி தனது அறிக்கையை தாக்கல் செய்தபிறகு அதை நாடாளுமன்றத்திற்குத்தான் அனுப்ப வேண்டும். அமைச்சரவையே இதை ஏற்பதா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்க வேண்டும். நீதித்துறை சட்டமியற்ற முடி யாது. உச்ச நீதிமன்றமும், லோதா கமிட்டியும் “தமிழ்நாடு அமைப்புகள் பதிவாளர் சட்டத்தை” மீறியுள்ளன.
 
அரசியல் சாசன சட்டத்தை மாற்ற வேண்டுமெனில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். நீதிமன்றத்தால் பிசிசிஐயின் விதிமுறைகளை மாற்றியமைக்க முடியாது. பிசிசிஐ-க்கு சீர்திருத்தம் தேவை என்பதை ஒப்புக்கொண்டால், நீதித்துறைக்கும் சீர்திருத்தங்கள் தேவைப்படுகிறது” என்று கூறியுள்ளார்.