1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : சனி, 25 மார்ச் 2017 (19:40 IST)

ஆஸ்திரேலியாவை மிரட்டிய சைனா-மேன் பவுலர்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி இன்று தர்மசாலாவில் தொடங்கியது. இதில் அறிமுக வீரர் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.


 

 
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி இன்று தர்மசாலாவில் தொடங்கியது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 300 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. விராட் கோலி காயமடைந்துள்ளதால் அவருக்கு பதிலாக குல்தீப் யாதவ் களமிறங்கினார். இது இவருக்கு முதல் போட்டி.
 
அறிமுகமான முதல் போட்டியிலே 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இவரது பந்து வீச்சீல் ஆஸ்திரேலிய அணி திணறியது குறிப்பிடத்தக்கது. இடது-கை பவுலரான குல்தீப் யாதவ், லெக்-ஸ்பின் முறையில் பவுலிங் வீசுகிறார். ஸ்டைல் சைனா-மேன் டெலிவரி என்று கூறுப்படுகிறது.
 
இதன்மூலம் இந்தியாவுக்கு ஒரு சைனா-மேன் பவுலர் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடிய எல்லீஸ் ஏகான்ங் என்னும் வீரர் சீன வம்சாவளியில் இருந்து டெஸ்ட் கிரிக்கெட் விளையாடிய முதல் நபர். இவர், லெக்-ஸ்பின் வீசும் இடது-கை பந்துவீச்சளராக இருந்தார். இவர் பந்துவீச்சுக்குப் பிறகே, சைனா-மேன் என்ற சொல் கிரிக்கெட்டில் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.