வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Modified: வெள்ளி, 14 நவம்பர் 2014 (16:10 IST)

ரோகித் சர்மாவின் அசத்தல் சாதனைகளை என் குழந்தைகளிடம் சொல்வேன்: கோலி

இலங்கை அணிக்கு எதிராக நடந்த 4 ஆவது ஒரு நாள் போட்டியின் போது, அதிக ரன்கள் எடுத்து புதிய உலக சாதனை புரிந்த ரோகித்சர்மாவை தற்காலிக கேப்டன் கோலி பாராட்டியுள்ளார்.
 
இந்தியா-இலங்கை அணிகள் மோதிய 4 ஆவது ஒரு நாள் போட்டியில், இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித்சர்மா 264 ரன்கள் எடுத்து பல்வேறு அரிய சாதனைகளை படைத்தார். மேலும் இதுகுறித்து கேப்டன் கோலி கூறுகையில், ரோகித் சர்மா திறமைமிக்க அபாயகரமான வீரர் என்று தெரிவித்தேன். அதனை அவர் நிரூபித்துவிட்டார்.
 
மேலும் தொடக்க ஆட்டக்காரரான அவர் 70 முதல் 80 ரன்கள் எடுத்து நிலைத்து விட்டால் அவரை கட்டுப்படுத்த முடியாது. களத்தில் அவருடன் சேர்ந்து விளையாடியது எண்ணி பெருமைப்படுகிறேன். இச்சாதனைகள் அனைத்தையும் என் குழந்தைகளிடம் பெருமையுடன் கூறுவேன்.
 
இச்சாதனை புரிந்த அன்று களத்திலிருந்து ரோகித்சர்மாவின் ஆட்டத்தை நேரில் பார்த்தேன் என்று கூறுவேன். மேலும் இந்த அரிய சாதனையை யாரும் முறியடிக்க முடியாது என நம்புகிறேன்.
 
மேலும் நடந்து முடிந்த 4 ஆட்டங்களிலும் வென்றுள்ளதால் 5 ஆவது ஒரு நாள் போட்டியை மெத்தனமாக எடுத்து கொள்ள மாட்டோம். நான் கேப்டனாக அணியை வழிநடத்தியதில் வெற்றிகளை அதிகம் சுவைத்துள்ளேன். எனினும் இக்கட்டான சூழ்நிலையில் தான் திறமைகள் பரிசோதிக்கப்படும் என்று கூறினார்.