பாண்டியாவை கண்டு பயந்து போன கோலி


Abimukatheesh| Last Updated: செவ்வாய், 15 ஆகஸ்ட் 2017 (14:49 IST)
இலங்கை அணிக்கு எதிராக நடைப்பெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் ஹர்திக் பாண்டியாவின் அதிரடி சதத்தை பார்த்து எதிரணிக்கு மட்டுமல்ல எனக்கும் பயமாக இருந்தது என்று விராட் கோலி கூறியுள்ளார்.

 

 
இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி இலங்கையை மூன்று போட்டிகளில் எளிதாக வெற்றிப்பெற்றது. கடைசி இரண்டு போட்டிகளில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றிப்பெற்றது குறிப்பிட்டத்தக்கது.
 
இந்நிலையில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இது குறித்து கூறியதாவது:-
 
இந்திய அணி 3 டெஸ்ட் போட்டியிலும் வென்றது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 320 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் அணியின் 8வது வீரராக களமிறங்கிய ஹர்திக் பாண்டியாவின் அதிரடி சதம் போட்டியின் நிலையை மாற்றி அமைத்தது.
 
அவரது அதிரடி சதத்தை பார்த்து எதிரணிக்கு மட்டுமல்ல எனக்கும் பயமாக இருந்தது என்றார். 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :