Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தோனி இல்லாமல் கோலியால் கேப்டனாக ஜொலிக்க முடியுமா?

சனி, 1 ஜூலை 2017 (16:05 IST)

Widgets Magazine

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் தோனி சிறப்பாக விளையாடியதை தொடர்ந்து இந்திய அணிக்கு தோனி வேண்டும் என கேப்டன் விராட் கோலி கூறினார்.


 

 
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நேற்று நடைப்பெற்ற போட்டியில் இந்திய அணி வெற்றிப்பெற்றது. இதில் தோனி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். போட்டி குறித்து கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-
 
இந்திய அணியின் பேட்டிங், பவுலிங் இரண்டும் சிறப்பாக இருந்தது. ரகானே பேட்டிங் நன்றாக இருந்தது. அதேபோன்று தோனி ஆட்டம் மிகவும் அபாரமாக இருந்தது. அவர் விலக நினைக்கும் போது இந்திய அணிக்கு தேவைப்படுகிறார். அவரது சேவை இந்திய அணிக்கு தேவை என்றார்.
 
ஐசிசி சாம்பியன்ஸ் தொடரில் இறுதிப்போட்டியில் இந்திய அணி பகிஸ்தான் அணியிடம் படுதோல்வி அடைந்தது. அப்போது இந்திய முன்னணி வீரர்கள் யுவராஜ் மற்றும் தோனி ஆகியோரின் பங்களிப்பு சரமாரியாக கேள்வி எழுப்பினர். சீனியர்கள் ஆகிய இவர்கள் அடுத்த உலக கோப்பை போட்டிக்குள் இந்திய அணியில் இருந்து விலக வேண்டும் என மறைமுகமாக கூறினர். 
 
இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் கோலி, தோனி இந்திய அணிக்கு தேவை என கூறியுள்ளார். பெரும்பாலும் போட்டிகளில் பாதிக்கு பின் கோலி தோனியிடம் தான் அறிவுரை கேட்டு வருகிறார். அதையும் அவர் போட்டி நிறைவடைந்த பின் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறிவிடுவார்.
 
பீல்டிங் செட் செய்வது மற்றும் பந்துவீச்சாளர்களை சரியான நேரத்தில் பயன்படுத்துவதில் தோனி கில்லாடி என்பது குறிப்பிடத்தக்கது.   


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

தமிழக கிரிக்கெட் வீரர் விஷம் வைத்து கொலை...

தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் அவரது நண்பர்களாலேயே விஷம் வைத்து கொலை செய்யப்பட்ட ...

news

மலிங்காவுக்கு ஓராண்டு தடை: கிரிக்கெட் வாரியம் அதிரடி நடவடிக்கை!

இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் ஜெயசேகராவை குரங்கு என விமர்சித்த இலங்கை கிரிக்கெட் ...

news

டோனி மச்சான் என ட்வீட் செய்த பிரோவோ; ரசிகர்கள் மகிழ்ச்சி

டிவைன் பிராவோ தனது ட்விட்டர் பக்கத்தில் டோனி மச்சான் உன்னை சந்திப்பதில் மகிழ்ச்சி என ...

news

பும்ரா போட்ட நோ பாலை வைத்து விளம்பரம் ; ஜெய்ப்பூர் போலீஸ் அடாவடி

இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரிட் பும்ரா வீசிய நோ பாலை, போக்குவரத்து விதிமுறைகளை குறித்த ...

Widgets Magazine Widgets Magazine