செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 7 ஜனவரி 2015 (16:37 IST)

6 ஆவது விக்கெட்டுக்கு நியூசிலாந்து ஜோடி உலக சாதனை

நியூசிலாந்து - இலங்கை அணிகளுக்கிடையேயான டெஸ்டு போட்டியில் 6 ஆவது விக்கெட்டுக்கு நியூசிலாந்தின் வில்லியம்சன் - வாட்லிங் ஜோடி உலக சாதனைப் படைத்துள்ளது.
 
நியூசிலாந்து – இலங்கை அணிகள் இடையிலான 2 ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து 221 ரன்களும், இலங்கை 356 ரன்களும் எடுத்தன.
 
பின்னர் 135 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2 ஆவது இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி ஒரு கட்டத்தில் 5 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்து தடுமாறிக்கொண்டு இருந்தது. கனே வில்லியம்சன் 80 ரன்னுடனும், விக்கெட் கீப்பர் வாட்லிங் 48 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
 

 
இந்த நிலையில் 6 ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த வில்லியம்சனும், வாட்லிங்கும் இலங்கை அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். நிலைத்து நின்று மிரட்டிய இந்த ஜோடியை இலங்கை பவுலர்களால் அசைக்க முடியவில்லை.
 
இறுதியில், நியூசிலாந்து அணி 2 ஆவது இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 524 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதலாவது இரட்டை சதத்தை பதிவு செய்த வில்லியம்சன் 242 ரன்னுடனும், வாட்லிங் 142 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
 
6–வது விக்கெட்டுக்கு வில்லியம்சன்–வாட்லிங் கூட்டணி 365 ரன்கள் திரட்டி புதிய புதிய உலக சாதனை படைத்தது. இதற்கு முன்பு கடந்த ஆண்டு (2014) இந்தியாவுக்கு எதிராக வெலிங்டனில் நடந்த டெஸ்டில் பிரன்டன் மெக்கல்லம், வாட்லிங் ஜோடி 352 ரன்கள் எடுத்ததே உலக சாதனையாக இருந்தது.