வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Modified: சனி, 18 ஏப்ரல் 2015 (15:02 IST)

டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி ஆண்டர்சன் புதிய சாதனை

இங்கிலாந்தின் முன்னனி வேகபந்து வீச்சாளர்களில் ஒருவரான ஆண்டர்சன் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை சாய்த்த இங்கிலாந்து வீரர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார்.
 

 
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே தற்போது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இதில் நேற்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர் ஆண்டர்சன் ராம்தினின் விக்கெட்டை வீழ்த்தினார். இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இங்கிலாந்து வீரர் என்ற புதிய சாதனைக்கு சொந்தகாரரானார் ஆண்டர்சன். 
 
இதுவரை 100 டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ள  ஆண்டர்சன் 384 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். இதற்கு முன் இயன் போத்தம் வீழ்த்திய 383 விக்கெட்டுகளே சாதனையாக இருந்தது.