1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Caston
Last Modified: சனி, 24 செப்டம்பர் 2016 (13:18 IST)

இந்தியா அபாரம்: சீட்டுக்கட்டாய் சரிந்த நியூசிலாந்து விக்கெட்டுகள்!

இந்தியா அபாரம்: சீட்டுக்கட்டாய் சரிந்த நியூசிலாந்து விக்கெட்டுகள்!

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளன.


 
 
இதன் முதலாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை அன்று கான்பூரில் தொடங்கியது. இது இந்திய அணி பங்கேற்கும் 500-வது டெஸ்ட் போட்டி என்பதால் மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
 
முதலில் பேட் செய்த இந்திய அணி 318 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனையடுத்து களம் இறங்கிய நியூசிலாந்து அணி இந்திய அணியின் பந்துவீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டது. தொடக்க ஆட்டக்காரர் மார்டின் கப்தில் 21 ரன்கள் எடுத்து வெளியேறினாலும், வில்லியம்சன், லாதம் இணை சிறப்பாக விளையாடியது.
 
இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி 152 ரன்னுக்கு 1 விக்கெட்டை இழந்து வலுவான நிலையில் இருந்தது. இதனையடுத்து மூன்றாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது.
 
இன்றைய நாள் ஆட்டம் தொடங்கியதும் இந்திய பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்த தொடங்கினர். வலுவாக இருந்த நியூசிலாந்து விக்கெட்டுகளை சீட்டுக்கட்டாய் சரித்தனர்.
 
லாதம், டெய்லர், வில்லியம்சன் என ஒவ்வொருவராய் நடையை கட்டினர். இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், ஜடேஜாவின் மாயாஜாலத்தில் சிக்கி அனைத்து விக்கெட்டுகளையும் அந்த அணி இழந்தது.
 
ஒரு விக்கெட் இழப்புக்கு 152 ரன்னுடன் மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய அந்த அணி 262 ரன்கள் குவிப்பதற்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், அஸ்வின் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
 
56 ரன்கள் முன்னிலையில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்க உள்ளது.