வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. »
  3. கிரிக்கெட்
  4. »
  5. செய்திகள்
Written By Muthukumar
Last Updated : ஞாயிறு, 13 ஏப்ரல் 2014 (13:39 IST)

ஒரு நாள் போட்டிகளிலிருந்து இஷாந்த் சர்மா விலக முடிவெடுத்தார்?

மணிக்கு 125 முதல் 130 கிமீ வேகம் வீசி வேண்டுமென்றே வேகத்தைக் குறைத்து பஜனை செய்து வந்ததோடு கடுமையாக போவோர் வருவோர் எல்லாம் அடித்து நொறுக்குமாறு பந்து வீசிய இஷாந்த் சர்மா 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் அணியில் தேர்வு செய்யப்படவில்லை என்ற போது மனமுடைந்து ஒருநாள் போட்டிகளிலிருந்தே விலக முடிவு எடுத்தாராம்!!
ஆஸ்ட்ரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூசீலாந்துக்கு எதிராக மிக மோசமாக வீசியதோடு ஜெயிக்கவேண்டிய போட்டிகளையும் தோற்கடித்த இவர் என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்:

"நாட்டுக்காக நான் சரியாக விளையாடாதபோதும், அணியில் தேர்வு செய்யப்படாத போதும் எனக்கு பின்னடைவு ஏற்படுகிறது. 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் அணியில் இடம்பெறாதது மனத்தளவில் கசப்பை ஏற்படுத்தியது.
T20 உலகக் கோப்பை ஒரு பெரிய விஷயம், டெஸ்ட் கிரிக்கெட் விளையாடினாலும் எந்த வகை கிரிக்கெட் ஆடினாலும் சிறப்பாக விளையாடவேண்டும் என்ற எண்ணம் தவிர என்னிடம் ஏதும் இருந்ததில்லை.
 
என் அம்மா மட்டும் என்னை தேற்றியிருக்காவிட்டால் நான் ஒருநாள் போட்டிகளிலிருந்தே ஓய்வு பெற முடிவெடுத்திருந்தேன். என் அம்மா இது போன்ற எதிர்மறை எண்ணங்களை ஆதரிப்பவர் இல்லை.
இப்போது நான் கிரிக்கெட்டை மகிழ்வுடன் ஆடி வருகிறேன், மகிழுவுடன் இருக்கும்போது களத்தில் சிறப்பாக செயல் பட முடியும் என்று கருதுகிறேன். 
 
இந்த ஐபிஎல். கிரிக்கெட்டில் சன் ரைசர்ஸ் அணிக்காக சிறப்பாக செயல்படுவேன். நான் நன்றாக வீசி வருகிறேன், இப்போது நல்ல ரிதமில் இருக்கிறேன். என்றார் இஷாந்த். 
 
சையத் முஷ்டக் அலி இருபது ஓவர் கிரிக்கெட்டில் இஷாந்த் சர்மா ஹரியானா அணிக்கு எதிராக டெல்லி அணிக்காக 9 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
 
"கடந்த ஐபிஎல் போட்டிகளில் டேல் ஸ்டெய்னிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். என்றார் இஷாந்த் சர்மா.