வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Modified: செவ்வாய், 21 அக்டோபர் 2014 (15:13 IST)

விராட் கோலி–அனுஷ்கா சர்மா குடும்பத்தினர் சந்திப்பு: நிச்சயதார்த்தமா?

நமது இந்திய அணியின் துணைக்கேப்டனான விராட் கோலிக்கும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. 
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னனி வீரர்களில் ஒருவரான விராட் கோலிக்கும், அனுஷ்கா சர்மாவுக்கும் நெருங்கிய நட்பு இருப்பதாக கூறப்பட்டு வந்தது. இருவரும் கடந்த 1 ஆண்டாகவே ஒன்றாக சுற்றி வந்தனர்.
 
இந்நிலையில் விராட் கோலி–அனுஷ்கா சர்மா ஆகிய இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாக தெரிகிறது. இரு வீட்டு குடும்பத்தினரும் சமீபத்தில் சந்தித்துப் பேசிக் கொண்டனர்.

இதைப்பற்றிய தகவல் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. எனினும் இவர்கள் இருவரும் தங்களது காதலை இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.