Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

காதல் மனைவிக்கு பாடல் அம்பு விட்ட இர்பான் பதான் (வீடியோ)


Abimukatheesh| Last Updated: செவ்வாய், 11 ஜூலை 2017 (11:46 IST)
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் தனது மனைவிக்காக ஒரு காதல் பாடலை வெளியிட்டுள்ளார். 

 

 
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் பந்து வீச்சில் புகழ் பெற்றவர். இவர் இதுவரை பந்து வீசிதான் பார்த்துள்ளோம். தற்போதுதான் காதல் அம்பு வீசி பார்க்கிறோம். இர்பான் பதான் இன்ஸ்டாகிராமில் பத்ரிநாத் கி துல்கானியா என்ற பாடலை பாடி வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
 
இதை தனது மனைவிக்கு அர்ப்பணிப்பதாக கூறியுள்ளார். அண்மையில் ஹர்மஜன் சிங் பாடகராக மாறியது குறிப்பிடத்தக்கது. கிரிக்கெட் வீரர்கள் கிரிக்கெட்டை தாண்டி அவர்களது திறமைகளை அவ்வப்போது வெளிப்படுத்தி வருகின்றனர். 
 


இதில் மேலும் படிக்கவும் :