1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Bala
Last Modified: வெள்ளி, 8 ஏப்ரல் 2016 (12:13 IST)

நாளை தொடங்குகிறது ஐபிஎல் தொடர்

கடந்த 2008ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர். ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற ஐபிஎல் தொடரின் 9வது தொடர் நாளை தொடங்குகிறது.


 


இதில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி டேர்டெவில்ஸ், கிங்ஸ்லெவன் பஞ்சாப், சன்ரைசரஸ் ஐதராபாத் ஆகியவற்றோடு ரைசிங் புனே சூப்பர் ஜெய்ன்ட்ஸ், குஜராத் லயன்ஸ் ஆகிய இரண்டு புதிய அணிகளையும் சேர்த்து மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் 14 போட்டிகளில் மோத வேண்டும். லீக் ஆட்டங்களின் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப்ஸ் சுற்றுக்கு தகுதி பெறும். பிளே ஆப் சுற்றில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் குவாலி பையர் 1-ல் மோதும். இதில் வெல்லும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

சூதாட்ட புகாரில் சிக்கிய சென்னை அணியின் கேப்டனாக இருந்த தோனி புதிய அணியான ரைசிங் புனே அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார். மும்பை வான்கடே மைதானத்தில் நாளை நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ரைசிங் புனே அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியின் கோலாகல தொடக்க விழா இன்று இரவு மும்பையில் நடக்கிறது. துவக்க விழாவில், பாலிவுட் நட்சத்திரங்கள் கேத்ரினா கைப், ரன்வீர் சிங் ஆகியோரின் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. குஜராத் லயன்ஸ் அணி வீரரும், மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னனி வீரருமான பிராவோ, சாம்பியன் பாடலுக்கு நடனமாடுகிறார்.