வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : செவ்வாய், 19 மே 2015 (15:01 IST)

ஐபிஎல் தொடரில் அதிக தொகைக்கு ஏலம் எடுத்தும் பலன் இல்லாத வீரர்கள்

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கபட்ட வீரர்கள் மிகவும் மோசமான விளையாட்டையே வெளிப்படுத்தியுள்ளனர்.
 

 
டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக ரூ.16 கோடிக்கு யுவராஜ் சிங் ஏலம் எடுக்கபட்டுள்ளார். இந்த சீசனில் அதிக விலைக்கு ஏலம் போனவர் இவர் தான். யுவராஜ் சிங் மொத்தம், 13 போட்டிகளில் பேட் செய்துள்ளார். மொத்தம் சேர்த்த ரன்கள் 248. இதில் இரு அரை சதங்கள் அடங்கும். அதிகபட்ச ரன் என்பது 57. பேட்டிங் ஸ்டிரைக் ரேட் 118. மொத்தம் சேர்த்த பவுண்டரிகள் 23, சிக்சர்கள் 10. ஒரு போட்டியில் டக் அவுட்டும் ஆனார்.
 
யுவராஜ் சிங், சென்னை அணியுடன்-9 ரன்கள், ராஜஸ்தான்-27, பஞ்சாப்-54, ஹைதராபாத்-9, கொல்கத்தா-21, மும்பை-2, பெங்களூர்-2, ராஜஸ்தான்-22, மும்பை-57, கொல்கத்தா-0, ஹைதராபாத்-2, சென்னை-32, பெங்களூர்-11.
 
பந்து வீச்சிலும் சொதப்பல் யுவராஜ் சிங் பந்து வீச்சிலும் சொல்லிக்கொள்ளும்படி சாதிக்கவில்லை. 9 ஓவர்கள் வீசிய யுவராஜ் சிங், 72 ரன்களை விட்டுக்கொடுத்ததோடு, ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தினார். இந்திய அணியில் ஆல்ரவுண்டராக ஜொலித்த யுவராஜ் சிங், டி20 உலகக்கோப்பை இறுதிபோட்டியின் சொதப்பல் ஆட்டத்துக்கு பிறகு அணியில் சேர்க்கப்படவேயில்லை.
 
யுவராஜ் சிங்கிற்கு டெல்லி கொடுத்த தொகையையையும், நடப்பு சீசனில் யுவராஜ் எடுத்த 248 ரன்களை வகுத்து பார்த்தால், யுவராஜ் சிங்கின் எடுத்துள்ள ஒவ்வொரு ரன்னுக்கும் டெல்லி கொடுத்த விலை ரூ.6 லட்சத்து 45 ஆயிரத்து 161.
 
மேலும் அடுத்த பக்கம்..

அதுபோல் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கபட்டவர் தினேஷ் கார்த்திக். இவர் ரூ.10.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். இவர் 14 போட்டிகளில் 105 ரன்கள் எடுத்துள்ளார். கேட்ச் மற்றும் ஸ்டெம்பிங் 14 செய்துள்ளார்.
 

 
அடுத்தபடியாக டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக இலங்கை வீரர் ஆங்கிலோ மேத்யூஸ் ரூ.7.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். அவர் 11 போட்டிகளில் விளையாடி மொத்தம் 144 ரன்கள் எடுத்துள்ளார். பந்து வீச்சு மூலம் 7 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
 

 
அதே அணியில் ரூ.4 கோடிக்கு ஜாகீர்கான் எடுக்கபட்டுள்ளார். இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். அதே அணியில் அமித் மிஸ்ரா ரூ.3.5 கோடிக்கு ஏலம் எடுக்கபட்டார். அவர் 12 போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சேர்ந்த டிரண்ட் போல்ட் ரூ. 3.8 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். ஆனால் 7 போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.