இந்திய அணி அபார வெற்றி


Abimukatheesh| Last Modified திங்கள், 13 பிப்ரவரி 2017 (16:14 IST)
இந்தியா - வங்கதேசம் ஆகிய அணிகள் இடையே நடைப்பெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 208 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது.

 
 
இந்தியா - வங்கதேசம் ஆகிய அணிகள் இடையே முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் நடந்தது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 687 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்த நிலையில் டிக்ளேர் செய்தது. வங்கதேசம் அணி முதல் இன்னிங்ஸில் 388 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் குவித்தது.
 
இரண்டாவது இன்னிங்ஸில் வங்கதேசம் அணி 250 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் இந்திய அணி 208 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது. 
 
முதல் இன்னிங்ஸில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி இரட்டை சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :