வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 11 நவம்பர் 2016 (17:11 IST)

இங்கிலாந்து இந்திய அணி பதிலடி - முரளி விஜய், புஜாரா சதம் விளாசல்

ராஜ்கோட்டில் நடைபெற்று இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 319 ரன்கள் குவித்துள்ளது.


 

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி குஜராத்தில் உள்ள ராஜ்கோட் மைதனாத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் அலைஸ்டர் குக் முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். அதன்படி, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 537 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியில் ஜோ ரூட் 124 ரன்கள், மொயின் அலி 117 ரன்கள் ஜோ ரூட் 124 ரன்கள் பென் ஸ்டோக்ஸ் 124 ரன்கள் குவித்தனர்.

பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி நேற்றைய இரண்டாம் நாள் [வியாழக்கிழமை] ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் குவித்திருந்தது. முரளி விஜய் 25 ரன்களுடனும், கவுதம் கம்பிர் 28 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில், இன்றைய மூன்றாவது நாள் தொடக்கத்திலேயே கவுதம் கம்பிர் [28] வெளியேறினார். பின்னர், முரளி விஜய்யுடன், புஜாரா இணைந்தா. இருவரும் நிலைத்து நின்று ஆடினர். ஆட்டநேர முடிவடையும் சிறிது நேரம் முன்பு புஜாரா 124 [17 பவுண்டரிகள்] ரன்களும், முரளி விஜய் 126 [9 பவுண்டரிகள், 4 சிக்ஸர்] ரன்களும் எடுத்து வெளியேறினர்.

பின்னர் நைட் வாட்ச்மேனாக களமிறங்கிய அமித் மிஸ்ரா 2 பந்துகளை சந்தித்து டக் அவுட் ஆகி வெளியேறினார். மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 319 ரன்கள் குவித்துள்ளது. விராட் கோலி 26 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

218 ரன்கள் பின்தங்கிய நிலையில் நாளை 4ஆவது நாள் ஆட்டம் தொடங்கம் கைவசம் 6 விக்கெட்டுகள் உள்ளது. இதனால், இந்திய அணி சிறப்பான நிலையும் எட்டும் என நம்பலாம்.