வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Modified: புதன், 6 மே 2015 (09:36 IST)

இந்திய அணியின் வங்கதேசம் சுற்றுப்பயணம் அறிவிப்பு

இந்திய அணி வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் பங்குபெறவுள்ளது.
 

 
தற்போது இந்திய அணி ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறது. இத்தொடர் முடிந்த பிறகு இந்திய அணி வங்கதேசத்திற்கு சென்று டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் பங்குபெறவுள்ளது. இதில் இரு அணிகள் விளையாடும் முதல் டெஸ்ட் போட்டி வரும் ஜூன் 10 ஆம் தேதி நடக்கவுள்ளது.
 
பின்னர் இரு அணிகள் போதும் 3 ஒரு நாள் போட்டிக்கான அட்டவனையும்  வெளியிடப்பட்டுள்ளது. இதில் முதல் ஒரு நாள் போட்டி வரும் ஜூன் 18 ஆம் தேதி நடக்கும். இதைத்தொடர்ந்து ஜூன் 21 அன்று 2 ஆவது ஒரு நாள் போட்டியும், அடுத்து ஜூன் 24 அன்று 3 ஆவது ஒரு நாள் போட்டியும் நடக்கவுள்ளது.