செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 24 ஜூன் 2015 (19:09 IST)

தோனி, தவான் அசத்தல்; வங்கதேசத்திற்கு 318 ரன்கள் இலக்கு

மகேந்திர சிங் தோனி மற்றும் ஷிகர் தவானின் அரைச்சதத்தால் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 317 ரன்கள் குவித்துள்ளது.
 

 
இந்தியா - வங்கதேசம் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மிர்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்துவீச தீர்மானித்தது. இந்திய அணியில், இரு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தது. ரவீந்திர ஜடேஜா மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோருக்கு பதிலாக ஸ்டூவர்ட் பின்னி மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
 
இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில் ரோஹித் சர்மாவும், 29 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அடுத்து வந்த விராட் கோலியும் 25 ரன்களில் வெளியேறினார். நிலைத்து நின்று ஆடிய ஷிகர் தவான் 75 ரன்கள் குவித்தார். அதேபோல் இந்திய அணி கேப்டன் தோனி பல விமர்சனங்களுக்கு மத்தியில் 69 ரன்கள் குவித்தார்.
 
பின்னர் களமிறங்கிய அம்பத்தி ராயுடு தனது பங்கிற்கு 44 ரன்களும், ரெய்னா 38 ரன்களும் எடுத்தனர். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 317 ரன்கள் குவித்தது. வங்கதேசம் தரப்பில் மோர்தஷா 3 விக்கெட்டுகளையும், முஸ்தபிஷுர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.