வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 30 ஏப்ரல் 2015 (19:14 IST)

இந்தியாவிற்கு இரண்டாம் இடம்; பாகிஸ்தானுக்கு ஒன்பதாவது இடம்

ஐசிசி வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியலின் டி-20 தரவரிசைப் பட்டியலில் இந்தியா இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
 
தற்போது ஐசிசி டி-20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான புதிய தரவரிசைப் பட்டையலை வெளியிட்டுள்ளது. டி-20 போட்டியில் முதலிடத்தை இலங்கை அணி பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை இந்தியாவும், மூன்றாவது இடத்தை ஆஸ்திரேலியாவும், நான்காவது இடத்தை வெஸ்ட் இண்டீஸ் அணியும், ஐந்தாவது இடத்தை பாகிஸ்தான் அணியும் பிடித்துள்ளன.
 

 
அதுபோல, ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தை ஆஸ்திரேலியா அணி பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை இந்தியாவும், மூன்றாவது இடத்தை நியூசிலாந்தும், நான்காவது இடத்தை தென் ஆப்பிரிக்கா அணியும், ஐந்தாவது இடத்தை இலங்கை அணியும் பிடித்துள்ளன.
 
வங்கதேசத்துடனான ஒருநாள் தொடரை இழந்ததன் மூலம் பாகிஸ்தான் அணி ஒருநாள் தரவரிசைப் பட்டியலில், 9ஆவது இடத்தையே பிடித்துள்ளது. வங்கதேசம் அணி 8ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.