வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 26 நவம்பர் 2015 (18:01 IST)

இந்தியா சாதனை படைக்க வாய்ப்பு; தென் ஆப்பிரிக்காவிற்கு 310 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவிற்கு 310 ரன்கள் இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது.
 
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 215 ரன்கள் குவித்தது.
 

 
இதில் அதிகப்பட்சமாக முரளி விஜய் 40 ரன்களும், ஜடேஜா 34 ரன்களும், விருத்திமான் சஹாவும் 32 ரன்களும் எடுத்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில், சிமோன் ஹார்மர் 4 விக்கெட்டுகளையும், மோர்னே மோர்கல் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
 
பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 79 ரன்கள் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகப்பட்சமாக ஜேபி டுமினி 35 ரன்களும், ஹார்மர் 13 ரன்களும் எடுத்தனர்.
 
தென் ஆப்பிரிக்க அணியின் 8 வீரர்கள் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா தரப்பில் அஸ்வின் 5 விக்கெட்டுகளையும், ஜடேஜா 4 விக்கெட்டுகளையும், அமித் மிஸ்ரா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
 

 
பின்பு தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 173 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆகியுள்ளது. ஷிகர் தவான் 39 ரன்களும், புஜாரா 31 ரன்களும், ரோஹித் சர்மா 23 ரன்களும், கேப்டன் விராட் கோலி 16 ரன்களும் எடுத்தனர்.
 
தென் ஆப்பிரிக்கா தரப்பில் இம்ரான் தாஹிர் 5 விக்கெட்டுகளையும், மோர்னே மோர்கல் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன் மூலம் முதல் தென் ஆப்பிரிக்கா அணிக்கு 310 ரன்கள் இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது.
 
இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால், தென்ஆப்பிரிக்க அணி 2006ஆம் ஆண்டுக்கு பிறகு வெளிநாட்டு மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்ததில்லை என்ற சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்த பெருமையை அடையும்.