செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Modified: வியாழன், 16 ஏப்ரல் 2015 (10:59 IST)

தரவரிசை பட்டியல் வெளியீடு: இந்திய அணிக்கு 2 ஆம் இடம், கோலிக்கு 4 ஆம் இடம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள ஒரு நாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில், இந்திய அணி தொடர்ந்து 2 ஆம் இடத்தில் நீடிக்கின்றது.
 

 
ஒரு நாள் போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலில் இந்திய அணி தொடர்ந்து 2 ஆம் இடத்தில் நீடிக்கின்றது. முதலிடத்தை ஆஸ்திரேலியாவும், 3 ஆம் இடத்தை தென்ஆப்பிரிக்காவும், 4 ஆம் இடத்தை இலங்கை அணியும், 5 ஆம் இடத்தை நியூசிலாந்து அணியும் முறையே பெற்றுள்ளன.
        
மேலும் பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலில் தென்ஆப்பிரிக்க அணியின் டிவில்லியர்ஸ் டாப் இடத்தை தக்கவைத்துள்ளார். இந்திய வீரர்கள் எடுத்துகொண்டால் நட்சத்திர வீரர் கோலி 4 ஆம் இடத்தை பிடித்துள்ளார். தொடக்க ஆட்டக்காரரான தவான் 6 ஆம் இடத்திலும், தோனி 8 ஆம் இடத்திலும் முறையே உள்ளனர். 
 
லீடிங் பந்துவீச்சாளர்களில் ஆஸ்திரேலிய அணியின் மிட்செல் ஸ்டார்க் முதலிடத்தை பிடித்துள்ளார். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஷமி 11 ஆவது இடத்தை பிடித்துள்ளார். டாப் 10 பந்துவீச்சு பட்டியலில் இந்திய வீரர்கள் யாரும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.