செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Bharathi
Last Updated : செவ்வாய், 6 அக்டோபர் 2015 (14:40 IST)

தென் ஆப்பிரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணிந்தது இந்தியா

இந்தியாவுக்கு எதிரான 2வது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி அசத்தல் வெற்றி பெற்றது.


 
 
இரு அணிகளுக்கும் இடையே தர்மசாலாவில் நடைபெற்ற முதல் T20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவை வீழ்த்தியது.
 
இந்நிலையில் தொடரை நிர்ணயம் செய்யும் இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நேற்று நடைபெற்றது.
 
டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி இந்திய அணியை பேட்டிங் செய்ய பணித்தது. தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச்சாளர்களின் ஆக்ரோஷ பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். இந்திய அணியில்  அதிகபட்சமாகரோகித் சர்மா, ரெய்னா தலா 22 ரன்கள் சேர்த்தனர். இறுதியில் 17.2 ஓவர்களில் இந்திய அணி 92 ரன்களில் சுருண்டது. 93 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி விளையாடியது.
 
92 ரன்களில் இந்தியா சுருண்டதால் ஆவேசமடைந்த ரசிகர்கள் மைதானத்தினுள் தண்ணீர் பாட்டில்களை வீசியதால் ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மைதானத்தின் எல்லைக்கோட்டு பகுதி அருகே போலீசார் காவல் பணியில் ஈடுபட்டனர். சாதகமான சூழல் நிலவியதால் போட்டி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.
 
தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி, 17.1 ஓவரில் 4 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட 2-0 என்ற கணக்கில் தொடரையும் தென்ஆப்பிரிக்கா கைப்பற்றியது.