வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Geetha priya
Last Updated : புதன், 2 ஜூலை 2014 (11:04 IST)

' இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் அதிக ரன்களை குவிக்க வேண்டுமென தெரியும், யாரும் அறிவுரை சொல்ல தேவையில்லை' - விராட் கோலி

டெஸ்ட் தொடரில் பங்கேற்க இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிகெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மான் விராட் கோலி, இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் அதிக ரன்களை குவிக்க வேண்டுமென தனக்கே தெரியும் எனவும் இதற்காக  யாரும் அறிவுரை சொல்லவேண்டுமென்ற அவசியம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி தலைமையில்,  டெஸ்ட் தொடரில் பங்கேற்க இந்திய அணி இங்கிலாந்து சென்றுள்ளது.
 
இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது குறித்து பேசிய விராட் கோலி,  'இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் பங்கேற்பது பெரிய விஷயம் எனவும், அதிக ரன்களை குவிக்க வேண்டுமெனவும் எனக்கு தெரியும், இதற்காக  யாரும் அறிவுரை சொல்லவேண்டுமென்ற அவசியம் இல்லை.
 
நான் அனைத்து போட்டிகளையும் அப்படி தான் பார்கிறேன். நான் சிறப்பாக விளையாடவேண்டுமென நினைக்கிறேன். 
 
இந்தியாவில் கிரிக்கெட் விமர்சகர்கள் விசித்திரமாக உள்ளனர். ஒரு கிரிக்கெட் வீரர் எத்தனை போட்டியில் நன்றாக திறமையை வெளிப்படுத்தினாலும், அவர் ஒரு போட்டியில் நன்றாக விளையாடாவிட்டால் அந்த வீரர் திறமை உடையவரா என சந்தேகப்படுகின்றனர்.
 
ஒரு வீரர் நன்றாக விளையாட வேண்டுமென்றால் அவர்களை பற்றிய பாசிடிவ்வான நல்ல விஷயங்களை சொல்ல வேண்டும். அதை தவிர்த்து, அந்த வீரர் அவருடைய திறமைகளை நிரூபிக்க வேண்டுமென சொல்ல தேவையில்லை. நான் இப்படிப்பட்ட விமர்சனங்களை கவனிப்பதே இல்லை எனத் தெரிவித்துள்ளார்.