Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஸ்மித், வார்னர் இல்லாதது இந்தியாவுக்கு நல்லதாம்...

Last Updated: சனி, 14 ஏப்ரல் 2018 (13:20 IST)
ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனும் தற்போதைய வர்ணனையாளருமான இயன் சாப்பல், ஸ்மித், வார்னர் ஆஸ்திரேலிய அணியில் இல்லாதது இந்திய அணிக்கு நல்லது என தெரிவித்துள்ளார். 
 
ஸ்மித் மற்றும் வார்னருக்கு விதிக்கப்பட்டுள்ளது அனைவருக்கும் தெரிந்ததே. இதனால், ஆஸ்திரேலிய அணியை முதன் முறையாக டெஸ்ட் தொடரில் வெல்லும் வாய்ப்பு இந்திய அணிக்கு அதிகம் உள்ளது என  இயன் சாப்பல் கூறியுள்ளார்.
 
நவம்பர் மாதம் கடைசி வாரம் தொடங்கும் தொடரில் 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து இந்திய அணி விளையாடுகிறது. 
 
இந்நிலையில், இயன் சாப்பல் இது குறித்து கூறியதாவது, வார்னர், ஸ்மித் எந்த மைதானத்தில் இறங்கினாலும் ரசிகர்கள் அவர்கள் இருவரையும் கேலி செய்து கூச்சல் எழுப்புவது நிச்ச்யம். 
 
எனவே இந்தியாவுக்கு எதிராக அவர்கள் ஆடாமல் இருப்பதே நல்லது. நடைபெற இருக்கும் போட்டியில், இந்தியா எளிதில் வெல்லுமா என்பது எனக்கு தெரியாது. ஆனால் ஆஸ்திரேலியாவில் தொடரை வெல்ல இந்தியாவுக்கு இதை விட சிறந்த வாய்ப்பு கிடைக்காது என தெரிவித்துள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :