வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : வியாழன், 18 டிசம்பர் 2014 (16:39 IST)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட்: 408 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இந்தியா

பிரிஸ்பேனில் கப்பா மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 408 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலிய அணியில் ஹேசல்வூட் தனது அறிமுக டெஸ்டில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 48 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1–0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
 
இந்த நிலையில் இந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் நகரில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். நேற்றைய ஆட்டத்தில் முரளி விஜயின்  அசத்தலான சதத்தின் உதவியால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 83 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 311 ரன்கள் சேர்த்தது. ரஹானே 75 ரன்களுடனும் (122 பந்து, 7 பவுண்டரி), ரோகித் சர்மா 26 ரன்களுடனும் (34 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தனர்.
 
இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த  ரஹானேவும், ரோகித் சர்மாவும் ஹேசல்வூட்டின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். மேற்கொண்டு 6 ரன்களை சேர்ந்த ரகானே 81 ரன்களில் வெளியேறினார். அதேபோல், சர்மாவும் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். எதிர்பார்க்கபட்ட கேப்டன்  தோனியும் 33 ரன்களில் ஹாஸ்லேவுட் பந்தில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேற இந்திய அணி 408 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
 
இந்திய அணி 97 ரன்களுக்கு கடைசி ஆறு விக்கெட்டுகளை இன்று பறிகொடுத்துள்ளது. ஆஸ்திரேலிய அணியில் அபாரமாக பந்து வீசிய அறிமுக வீரர் ஹாஸ்லேவுட் 58 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
 
இதைத்தொடர்ந்து களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணி, ஒரு விக்கெட் இழப்பிற்கு 51 ரன்கள் எடுத்து வருகிறது. அபாயகரமான ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 29 ரன்களில் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார்.