வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 29 பிப்ரவரி 2016 (14:44 IST)

இந்தியாவை சொந்த மண்ணில் வீழ்த்துவது கடினம் - ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித்

இந்தியாவை சொந்த மண்ணில் வீழ்த்துவது கடினம் - ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித்

இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது கடினம் என்று ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
 

 
வருகின்ற மார்ச் 15ஆம் தேதி முதல் ஏப்ரல் 3ஆம் தேதி வரை, 6ஆவது டி 20 உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெறவுள்ளது.
 
குரூப் ‘ஏ’ பிரிவில் இலங்கை, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து அணிகளும். குரூப் ‘பி’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளும் நேரடியாக இடம் பெற்றுள்ளன.
 
இந்நிலையில் இது குறித்து கூறியுள்ள ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், “டி 20 கிரிக்கெட் போட்டியில் அன்றைய தினம் எந்த அணிக்கானதோ, அந்த அணி அன்றைக்கு பயங்கரமானதாக திகழும். அதே சமயம், தனிப்பட்ட வீரர் ஒருவரும் உங்களிடமிருந்து ஆட்டத்தை பறித்துக்கொள்ள முடியும்.
 
ஆனால், இந்தியாவின் சீதோஷ்ன நிலையில், இந்திய அணியை வீழ்த்துவது என்பது மிகச் சிரமமான காரியமாகும். அவர்கள் பலமான அணி என்பதை ஆஸ்திரேலியாவில் 3 போட்டிகளில் விளையாடியபோதே பார்க்க முடிந்தது. அவர்கள் சரியான வளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருப்பதாகவே நினைக்கிறேன்.
 
டி 20 உலகக்கோப்பை ஒன்றுதான் எங்களுக்கு கைகூடாமல் இருந்து வருகிறது. இதனை கைப்பற்றிவிட்டால் மிகச் சிறப்பானதாக இருக்கும். இதுவே எங்களது இலக்கு.
 
வெளிநாட்டினர்களான எங்களுக்கு இந்திய சுற்றுப்பயணம் கடினமான ஒன்றாக இருக்கும். ஆனாலும், இதனை உண்மையிலேயே ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்த தொடரில் எங்கள் அணி வீரர்களால் உண்மையான தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று நினைக்கிறேன்.
 
நான் முதல் மூன்று இடங்களுக்குள் களம் இறங்குவேனா அல்லது நான்காவது வீரராக களம் இறங்குவேனா என்று தெரியாது. அந்த இடத்தை நிரப்புவதற்கு எங்களிடம் நிறைய வீரர்கள் இருக்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.