சிக்ஸ் அடித்து சிக்ஸ்த் சென்ச்சூரி விளாசிய ரோகித்!!

Sugapriya Prakash| Last Updated: சனி, 19 அக்டோபர் 2019 (15:11 IST)
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிர்க்கெட் போட்டியில் சதமடித்துள்ளார் ரோகித் சர்மா. 
 
இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. முதல் டெஸ்ட் போட்டியில் 203 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 137 ரன்கள் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது. 
 
மூன்று டெஸ்ட்டுகளில் இரண்டில் வெற்றி பெற்று விட்டதால் இந்தியாவின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் மூன்றாவது டெஸ்ட்டிலும் வெற்றிபெற்று தென் ஆப்பிரிக்க அணியை இந்தியா ஒயிட்வாஷ் செய்யும் என ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
 
இருப்பினும் தொடக்க ஆட்டக்காரரான மயங்க் அகர்வால் 10 ரன்களில் அவுட் ஆக, புஜாரா ஒரு ரன் கூட அடிக்காமல் வெளியேறினார். கேப்டன் வீராட் கோலியும் 12 ரன்களில் அவுட் ஆனது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஆனால், இதன் பின்னர் ரோகித் சர்மாவும், ரகானேவும் சிறப்பாக விளையாடி வருகின்ரனர். ரோகித் சர்மா சிக் அடித்து சதம் விளாசியுள்ளார். இது அவரது 6வது சமதம் என்பது குறிப்பிடத்தக்கது. ராகனேவும் அரை சதத்தை கடந்து சதம் அடிப்பதற்கு இன்னும் குறைந்த ரன்களே உள்ளது. 
 
ஆக மொத்தம், இந்திய அணி 58 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் சர்மா 117 ரன்களுடனும், ரகானே 83 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 


இதில் மேலும் படிக்கவும் :