வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Ashok
Last Updated : செவ்வாய், 29 செப்டம்பர் 2015 (20:37 IST)

3 நாள் டெஸ்ட் போட்டி : இந்தியா ஏ அணி வெற்றி

வங்கதேச 'ஏ' அணிக்கு எதிரான 3 நாள் டெஸ்ட் போட்டியில், இந்தியா 'ஏ' அணி  31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.


 


இந்தியா 'ஏ' மற்றும் வங்கதேச 'ஏ' அணிகள் மோதிய மூன்று நாள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.. முதல் இன்னிங்சில் வங்கதேச 'ஏ' அணி அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 228 ரன்கள் எடுத்தது. பின்னர், இந்திய ஏ அணி 86.1 ஓவர்களில் 411 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. தவண் 150 ரன்கள் எடுத்தார். இந்தியா 'ஏ' 411 (டிக்ளர்) ரன்கள் எடுத்தன.

இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், வங்கதேச 'ஏ' அணி இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 36 ரன்கள் எடுத்திருந்தது. மோமினுல் ஹக் (9), லிட்டன் தாஸ் (7) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இன்று கடைசி மற்றும் மூன்றாவது நாள் ஆட்டத்தில் மோமினுல் (54) அரை சதம் கடந்தார். இறுதியில் வங்கதேச ஏ அணி 39.3 ஓவர்களில் 151 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் இந்திய ஏ அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஈஸ்வர் பாண்டே, யாதவ் ஆகிய இந்திய பவுலர்கள் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்கள்.