1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வெள்ளி, 20 மார்ச் 2015 (20:41 IST)

இந்தியாவுடனான போட்டி மிகவும் சவாலானதாக இருக்கும்: ஆஸ்திரேலியா கேப்டன் கிளார்க்

அடிலெய்டில் இன்று நடைபெற்ற ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான காலிறுதி போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 213 ரன்களில் ஆல் அவுட் ஆனது. பின்னர் 214 ரன் இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 216 ரன் எடுத்து  6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
காலிறுதி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியதை தொடர்ந்து ஆஸ்திரேலியா அரையிறுதியில் இந்தியாவுடன் மோத உள்ளது. இன்றைய  பரிசளிப்பு விழாவில் பேசிய ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறும்போது, "அரையிறுதியில் இந்தியாவுடன் மோத உள்ளோம். அந்த போட்டி மிகவும் சவாலானதாக இருக்கும். இந்தியா சிறப்பான ஃபார்மில் உள்ள அணியாகும். கேப்டன் தோனி தலைமையில் அந்த அணி சிறப்பாக ஆடி வருகிறது. எனவே ஆஸ்திரேலியாவுக்கு மிகவும் சவாலான போட்டியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை"  என்றார்.
 
ஆஸ்திரேலியா உலகக்கோப்பை அரையிறுதி போட்டிகளில் 7வது முறையாக நுழைகிறது. இதுவரை, நுழைந்த 6 அரையிறுதி சுற்றுகளில், எந்த ஒரு அரையிறுதி போட்டியிலும் அந்த அணி தோற்றதில்லை. 2011 உலகக்கோப்பையில், காலிறுதியில் அகமதாபாத்தில் நடந்த போட்டியில், தோனி தலைமையிலான இந்திய அணியிடம், ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தோற்று வெளியேறியது குறிப்பிடத்தக்கது.